Wednesday 21 December 2011

சிந்தனை செய்(யாதே).....

ஒரு செயலை செய்த பின்
சிந்தனை செய்யாதே!
செயலை செய்யும் - முன்
சிந்தனை செய் - தவறு
என்று தெரிந்தால் திருத்திக்கொள் - நல்லதாக
முடிந்தால் தொடர்ந்து - அந்த
செயலை செய்.....


 

சொன்ன வார்த்தைகள்....

உதடுகளில் இருந்து - வந்த
சொல் ஒரு நாள் - மறைந்து
போகும் - ஆனால்
உள்ளத்தில் இருந்து - வந்த
சொன்ன சொல் மட்டும்
என்றும் நிலைத்து இருக்கும்..
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...
 



Tuesday 20 December 2011

தோல்விகள் நிலையானது அல்ல

தோல்விகள் நிலையானது - என
நினைத்துவிடாதே அந்த
தோல்விகள் கூட - உனக்கு 
வெற்றிக்கான வழிகளை
சொல்லும் நண்பா!............



Monday 19 December 2011

சோதனைகளை கடந்து செல்வோம்.....

சோதனைகளை கடந்து செல்வபவனுக்கு
வெற்றிக்கான வழிகள் - தானாகவே
கிடைக்கின்றன - ஆனால்
சோதனைகளை கடந்து செல்ல
தெரியாதவனுக்கு வெற்றிக்கான வழி
இருந்தும் - தவிக்கிறான்
சோதனைகளை கடந்து செல்வோம்
நண்பர்களே வெற்றிக்கான - வழி
நமக்காக காத்து கொண்டிருக்கிறது...






Sunday 18 December 2011

வார்த்தைகள் மாறும்?

மனதை காயபடுத்திய வார்த்தைகள்
என்றும் மாறது -ஆனால்
மனதை காயபடுத்திய
இதயம் மட்டும் ஒரு
நாள் மாறும் காத்தி இரு
நண்பா...





Saturday 17 December 2011

விதியை மாற்றி எழுதுவோம்......

ஓவ்வொரு நாழும் - நாம்
செய்யும் செயல் தான்
நம்முடைய - விதியை
நிர்ணயிகின்றன.
காரணம் இல்லாமல் 
விதியை குற்றம் - சொல்லாத
தோழா......
விதியை மாற்றி எழுத
நம்பிக்கை மட்டும் இருந்தால்
போதும் தோழா.....
வாருங்கள் தோழர்களே.....

 






Friday 16 December 2011

என் இதயமே......

நேசித்துபார் இந்த உலகம்
உன் கையில் என்று
சொன்னாய்
ஆனால் - நீ
மட்டும் என்னுடன்
இல்லை - கரணம் மட்டும்
சொல்லிவிட்டு போயிருக்கலாம் - என்
இதயமே......

 

 

 

Wednesday 14 December 2011

முயற்சி செய்.....

தோல்விகளை நினைத்து கவலை
படுவதை விட - வெற்றி
காண வழியை தேடுவோம்
தோல்விகள் எல்லாம் மறைந்து
போகும்....