Sunday 29 December 2013

வாழ்க்கை

சோதனைகளை கடந்து
வாழ்வது - மட்டும்
வாழ்க்கை என்று
நினைத்தோம் - ஆனால்
சோதனைகளிலும் - வாழ்ந்து
காட்டுவது தான்
வாழ்க்கை...!

Saturday 21 December 2013

மலராய்...

செடியில் பூத்த 
மலராய் - என்னுள் 
மலர்ந்தாய் !
கலையில் மலரும் 
மலர்களை - போல் மலர்ந்தாய் ,
மலையில் வாடிவிடும் 
மலராய் மறைந்தாய் , 
ஆனால் ,
ஏனோ உன்னை 
வெட்டிவிடவும் மனம் - இல்லை,
உன்னை தூக்கி எறியவும் 
தேரியவில்லை 
அந்த மலர்களை போல்...!

Friday 17 February 2012

கல்...............

கல்லும் கரையும்
காதலிக்கும் போது - ஆனால்
கரைந்த கல்லும்
இறுகிவிடும் - நீ
என்னை மறந்து விடு - என்று
சொல்லும் போது.....

Monday 30 January 2012

சுமைகள்........

தோல்விகள் மட்டும்
சுமைகள் என்று - என்னிவிடதே
வெற்றிகளும் ஒரு
சுமை தான் - காரணம்
தோல்விகள் வெற்றி பெறுவதற்கு
வழி சொல்லும் - வெற்றிகள்
உன்னை அமைதியாக செல்ல 
வழி சொல்லும்!...
 


Wednesday 11 January 2012

சோதனைகள்.....

சோதனைகளை கடந்து செல்
தொலைந்த நாட்களும் -
கூட வரும் 
சோதனைகளை கடக்க
முயலாத போது - இருக்கின்ற
நாட்களும் உன்னை விட்டு
விலகி செல்லும்.... 

Tuesday 10 January 2012

வலியின் கொடுமை...........

வலியின் கொடுமை
என்ன என்று - தெரிந்தது
என்னை மறந்து விடு
என்று சொன்ன போதுதான்!
மனதில் இருக்கின்ற வலியை
கூட சொல்லமுடியவில்லை
காரணம் - நாம்

பேசிய வார்த்தைகள் - மட்டும்
தான் நினைவில்
இருக்கின்றன....



Monday 9 January 2012

உன் விழிகள் பார்வையில்..........

உன் பார்வை பட்டவுடன்
தான் சூரியன் கூட உதிக்கிறான்
ஏன் என்றால் - உன்
விழி பார்வையில் இருந்து
தான் தனக்கு தேவையான
ஓளியை எடுத்து கொள்கிறான்
சந்திரன் கூட மறைந்து
விடுகிறான் - எவ்ளோ
அழகான பெண் என்று..
காலையிலும் மாலையிலும் உன்னுடைய
விழி பார்வையில் தான் வருகிறார்கள்
மறைகிறார்கள்
ஆனால் ஏனோ என்னை மட்டும்
பார்பதற்கு உன் விழிகள்
தயக்கம் காட்டுகின்றன....